இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே கடுமையான மோதல் நடந்த நிலையில் நேற்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து தற்போது முப்படை தளபதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, ஆப்ரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்க்கவே நடத்தப்பட்டது.

9 பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டது. அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாதிகளை உருவாக்கிய பயிற்சி முகாம்களை அழித்தோம். இதனால் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குறிப்பாக காந்தாக்கர் விமான கடத்தல், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ரவ்ப், முடாசிர் ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் எங்களுடைய மோதல் என்பது தீவிரவாதிகளுடன் மட்டும்தான் பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல என்று கூறினார்கள்.

அதன் பிறகு நேற்றிரவு போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் அதனை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக முறியடித்தது. ஆளில்லா விமான மூலமாக இந்தியாவின் ராணுவ தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்த நிலையில் அதனை இந்தியா வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. பாகிஸ்தானில் உள்ள பஸ்ரூர் வான் பாதுகாப்பு ரேடார் இந்தியாவால் அழிக்கப்பட்ட நிலையில் இதே போன்று பாகிஸ்தான் விமானப்படை தளங்களையும் இந்தியா அழித்துள்ளது என்றார். மேலும் ஆப்ரேஷன் சிந்தூரின் ஒரே நோக்கம் பயங்கரவாதிகளை அழப்பது மட்டும்தான் பாக் இராணுவத்தை தாக்குவதற்காக அல்ல என்று உறுதிப்படுத்தினார்.