ஆப்கானிஸ்தானில் இன்று மதியம் இந்திய நேரப்படி 1:27 மணி அளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நில நடுக்கம் 170 கிலோமீட்டர் பாலத்தில் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்பட்டதா அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதா என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.