
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோகோரா பகுதியில் தலைமை ஆசிரியர் ஒருவர் தன் கணவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 23 வயதான நிதி என்பவர் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சாந்தனு தேஷ்முக் (32). இவருக்கு சம்பவ நாளில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். பின்னர் தன் கணவன் இறந்தபிறகு தன்னிடம் டியூஷன் படிக்கும் 3 மாணவர்களின் உதவியோடு ஒரு காட்டிற்கு கணவனின் உடலை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்.
அதாவது தன்னுடைய கணவன் அடிக்கடி அடித்து ஆபாச வீடியோக்களை காண்பித்து மிரட்டி துன்புறுத்தியதால் கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்த சம்பவம் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் காட்டில் எரிந்த நிலையில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. மேலும் நிதியை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.