கடலூரைச் சேர்ந்த 54 வயதான சித்ரா மக்கள் பார்வை என்ற youtube சேனலை நடத்திவரும் நிலையில் இவர் சிறுவர்களை பாலியல் அத்துமீறலில் ஈடுபட வைத்து ஆபாசமாக ல்ஸ் எடுத்ததாக கூறி யூடிபர் திவ்யா கள்ளச்சி (30), கார்த்திக் (30)ஆகியோர் மீது  புகார் கொடுத்த நிலையில் மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் தன்னுடைய வங்கி கணக்கை ஹேக் செய்து திவ்யா 2.5 லட்சம் பணத்தை திருடியதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவர்களை வைத்து ஆபாச ரீல்ஸ் எடுத்ததாக கூறினர். இதைத்தொடர்ந்து மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த நிலையில் தற்போது அனைவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.