
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஹனிரோஸ். இவர் தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் நிலையில் மலையாளம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான முதல் கனவே என்ற திரைப்படத்தில் அதன் பிறகு ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் தான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அங்கு வந்தவர் தன்னிடம் கண்ணிய குறைவாக நடந்து கொண்டார் எனக்கூறியுள்ளார்.
மேலும் அதன் அவர் சமூக வலைதலைகளில் தன்னை பெண் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் ஆபாசமாக பேசுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நபரின் பெயரை அவர் குறிப்பிடாமல் மிகவும் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். மேலும் இதனால் தற்போது ரசிகர்கள் பலரும் அந்த நபர் யார் என்று கேட்டு வருகிறார்கள்.