தமிழக பாஜகவில் சமீப காலமாகவே சில பல பிரச்சனைகள் நடந்து வருகிறது. திருச்சி சூர்யா சிவா கட்சியிலிருந்து நீக்கம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கம் போன்ற பல அதிரடி நடவடிக்கைகள் தமிழக பாஜகவில் நிகழ்ந்து வருகிறது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவதோடு அடிக்கடி ட்வீட் பதிவுகளை வெளியிட்டு அண்ணாமலையை சீண்டி பார்க்கிறார். இந்நிலையில் பாஜக கட்சியின் சேர்ந்த பாபு என்பவர் காயத்ரி ரகுராமின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு இருந்தார்.

இது குறித்து காயத்ரி ரகுராம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரை  தொடர்ந்து பாஜக கட்சியிலிருந்து பாபு நீக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் பாஜக வெளியிட்ட கடிதத்தில் மாநில பொதுச் செயலாளர் என்ற இடத்தில் கையெழுத்து இல்லாததால் இந்த நீக்கம் செல்லாது என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவங்களால் பாஜக கட்சியில் தொடர் சலசலப்பு நிலவுகிறது.