
ஆப்ரேஷன் அஜய் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் 274 இந்தியர்களுடன் நான்காவது விமானம் இந்தியாவிற்கு புறப்பட்டது. இதனை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களை அழைத்து வர ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்தியா தொடங்கிய நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியர்கள் கட்டணம் இன்றி தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 1300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.