பெங்களூரு, தலகட்டாபுரா பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற 21 வயது இளைஞர் நேற்று ஆபத்தான வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் தலைக்கவசமும் அணியாமல் இருந்துள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றுள்ளது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து நரேஷை கைது செய்துள்ளனர். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 281 (பொது சாலையில் அலட்சியமாக வாகனம் ஓட்டுதல் அல்லது வாகனம் ஓட்டுதல்) மற்றும் இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் பொருத்தமான பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.