தமிழகத்தில் தென் சென்னை, வடசென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . வருகின்ற ஆகஸ்ட் 20 முதல் 23ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐந்து மாவட்டங்களை சேர்ந்த அனைத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டு இதில் பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், கைப்பேசி மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.