மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால் என்பவர் தான் இருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவர் ஒருவரை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்காக ஆன்லைனில் மருத்துவரை தேடிய இவருக்கு மொபைலில் ஒன்று கிடைத்துள்ளது. உடனே அந்த நம்பருக்கு போன் செய்த போது மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் 10 ரூபாய் அனுப்ப வேண்டும் என்று இரண்டு லிங்குகள் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரால் பணத்தை அனுப்ப முடியவில்லை.

பிறகு ஏதோ பிரச்சினை இருப்பதை அறிந்த இக்பால் தன்னுடைய வங்கி மேலாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நான்கு நாட்கள் கழித்து அவருடைய போனுக்கு அடுத்தடுத்து மெசேஜ் வந்துள்ளது. அதாவது வங்கி கணக்கில் இருந்து 77 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனே சைபர் பிரிவு நம்பருக்கு போன் செய்து தகவல் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.