ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆந்திராவில் பெரும்பான்மையுடன் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைக்கும் நிலையில் வருகின்ற 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார்.

இந்நிலையில் ஆந்திராவின் 21 இடங்களில் முன்னிலை வகிக்கும் நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சி தற்போது 2-வது பெரிய கட்சியாக மாறியுள்ளது. இதன் மூலம் பவன் கல்யாண் எதிர்க்கட்சித் தலைவராக மாறியுள்ளார். மேலும் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.