இயக்குனர் சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் வீரதீரசூரன். இது விக்ரம் நடிக்கும் 62 ஆவது படம்.  இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளதை பட குழு உறுதி செய்துள்ளது.

முதலில் இந்த படத்தில் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு தான் முதல் பாகம் உருவாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் கிராமிய தோற்றத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் “கல்லூர காத்து என் மேல” என்ற பாடல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலான “ஆத்தி அடியாத்தி” என்ற பாடல் வெளியாகி உள்ளது. தற்போது இப்பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.