
மத்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கி வருகிறது. ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் வீதம் ஒரு ஆண்டில் மொத்தம் மூன்று தவணைகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகள் தற்போது 17வது தவணைக்காக காத்திருக்கிறார்கள். விரைவில் இவர்களுடைய வங்கி கணக்கில் 2000 ரூபாய் தவணை பணம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கு சில நிபந்தனைகள் உள்ளது. இந்த திட்டத்தின் படி விவசாயிகள் பின்வரும் தகுதிகளை செய்தால் மட்டுமே பயன்பெற முடியும். அதன்படி விவசாயி இந்தியராக இருக்க வேண்டும். எந்த அரசு வேலையிலும் இருக்கக் கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகள் உள்ளது. இந்த திட்டத்தின் பயனாளியாக இருந்தால் வங்கி கணக்கில் தவணை பெறப்பட்டதா என்பதை பார்ப்பது மிகவும் எளிது . வீட்டில் அமர்ந்தபடியே எளிதாக பார்க்கலாம். அதற்கு ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும். ஆதாரனை பயன்படுத்தி தவணைத் தொகை பற்றி தெரிந்து கொள்ளலாம் . அதற்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ என்ற முகவரியில் செல்ல வேண்டும். அதில் உள்ளே சென்றதும் FARMERS CORNER என்ற வசதிக்குச் செல்வதன் மூலம், “Know Your Status” என்பதைக் கிளிக் செய்து மேலும் தொடரவும்.