
சமீபகாலமாக மனைவி டார்ச்சர் செய்வதால் கணவன்மார்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் பெங்களூருவில் அதுல் சுபாஷ் என்பவர் மனைவியின் டார்ச்சர் பொறுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று டெல்லியை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் சிஇஓ, ஒரு போலீஸ்காரர் என அடுத்தடுத்து பல செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போதும் ஒருவர் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மாணவ் சர்மா என்பவர் வசித்து வந்துள்ளார்.இ வருக்கு 25 வயது ஆகும் நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் மும்பையில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தன்னுடைய செல்போனில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை தற்போது தான் அவருடைய சகோதரி கண்டுபிடித்துள்ளார். அந்த வீடியோவில் தூக்கு கயிரில் தன் தலையை வைத்துக்கொண்டு மாணவ் மிகவும் உருக்கமாக பேசுகிறார். அதில் சட்டம் ஆண்களையும் பாதுகாக்க வேண்டும் இல்லை எனில் ஆண்களே இல்லாத காலம் வந்துவிடும். என்னுடைய மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார். நான் என்ன செய்ய முடியும். நான் இறப்பதை பற்றி அவள் கவலைப்படவில்லை நான் சாகப் போகிறேன். ஆனால் ஆண்களைப் பற்றி சிந்தியுங்கள் ஆண்களைப் பற்றியும் யாராவது கவலைப்பட வேண்டும். நான் போன பிறகு அனைத்தும் சரியாகிவிடும் இதற்கு முன்பும் நான் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். மேலும் இந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.