மொழி தெரியாத ஊரில் வழி தவறும் நிலை நிலவுவது சாதாரணமானதுதான். ஆனால் அதையும் தாண்டி, செயற்கை நுண்ணறிவை (AI) நுட்பமாக பயன்படுத்தி தன் தேவையை சாதித்த ஒரு இளைஞரின் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

பெங்களூருவில் வசிக்கும் வட இந்தியாவைச் சேர்ந்த சஜ்ஜன் மஹதோ என்ற கல்லூரி மாணவர், ஆட்டோ ஓட்டுனரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். கன்னடம் தெரியாததால் அவர் நேரடியாக பேசி விஷயம் புரிய வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், தனது மொபைலில் உள்ள ‘சாட் ஜிபிடி’ எனும் செயற்கை நுண்ணறிவு கருவியை திறந்தவர், தனக்காக கன்னடத்தில் பேசச் செய்து, பேரம் பேச வைத்தார். ஆட்டோ ஓட்டுனர் ஆரம்பத்தில் ரூ.200 கோரினார். இதனை ஏற்க மறுத்த மாணவர், ‘நான் தினமும் இந்த வழியே பயணிக்கிறேன், ஒரு கல்லூரி மாணவன், தயவுசெய்து ரூ.100க்கு வர முடியுமா?’ என சாட் ஜிபிடி மூலம் கேட்டார்.

ஆட்டோ ஓட்டுனர் முதல் சுற்றில் ரூ.50 மட்டும் குறைக்கத் தயாராக இருந்தார். பின்னர் சாட் ஜிபிடி தொடர்ந்து நயமான முறையில் உரையாட, இறுதியில் ரூ.120க்கு சமரசம் செய்தார். இதனை மாணவரும் ஏற்று பயணம் மேற்கொண்டார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sajan Mahto (@sajanmahto.ai)

பல மொழிகளின் கலவையான பெங்களூருவில், மொழி பாகுபாடு காரணமாக நேரும் சிக்கல்களுக்கு சாட் ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் எளிய தீர்வுகளை வழங்கும் உதாரணமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது.

மொழி என்பது தடுக்கோல் அல்ல; சரியான கருவியை பயன்படுத்தினால் அது பாலமாக மாறும் என்பதை நிரூபித்துள்ளார் மாணவர் சஜ்ஜன் மஹதோ.