கர்நாடக மாநிலத்தில் 2 பெண்கள் ஒரே நேரத்தில் 2 ஆட்டோக்களை புக் செய்துள்ளனர். அவர்கள் முதலில் எந்த ஆட்டோ வருகிறதோ அந்த ஆட்டோவில் ஏறி செல்லலாம் என்று முடிவு செய்திருந்தனர். அந்த வகையில் முதலில் ஒரு ஓலோ ஆட்டோ வந்தது. அந்த ஆட்டோவில் இரு பெண்களும் ஏளி சென்ற நிலையில் மற்றொரு ஓலோ ஆட்டோவும் வந்தது. அவர் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்து சென்ற நிலையில் பெண்களை வழிமறித்து தகராறு செய்தார்.

அந்தப் பெண்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கன்னத்தில் அறைந்தார். அதோடு செல்போனை பறிக்க முயன்று காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார். அந்த சம்பவங்களை பெண்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் அது மிகவும் வைரலானது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.