
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் விஜய் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று கூறியதால் அது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தினை தெரிவித்து வரும் நிலையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் இது தொடர்பாக பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பிரத்தியேகமாக பேட்டி கொடுத்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, நடிகர் விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம். ஏற்கனவே 25 சதவீத இட ஒதுக்கிடை வைத்துள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டால் மதிப்பானதாக இருக்கும்.
ஆனால் விஜய் பூஜ்ஜியத்திலிருந்து தான் தொடங்கணும். அவர் இன்னும் களத்திற்கு வரவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நாம் ஆட்சிக்கு வரவில்லை. சும்மா சொல்லி வைப்போம். இது சலசலப்பை ஏற்படுத்துவதற்கான அறிவிப்பு. அவரே சொல்கிறார் தனியாக ஜெயிப்போம் வருவோம் என்று. அது அவருடைய நம்பிக்கை என்பதால் அதை நாம் வாழ்த்தணும். மக்கள் தான் அவருடைய நம்பிக்கையை முடிவு பண்ண போறாங்க. மேலும் இன்னும் ஒரு வருடம் தேர்தலுக்கு இருக்கும் நிலையில் 75 வருடங்களாக அரசியல் களத்தில் அனுபவம் பெற்று அதிமுகவும் திமுகவும் சும்மா இருக்குமா. அதை எப்படி டீல் பண்ணனும் எப்படி கழற்சி விடனும் அப்படிங்கறது தெரியும் என்று கூறினார்.