உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரத்யராஜ் பகுதியில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும். இதேபோன்று 12 வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். அந்த வகையில் அடுத்த மாதம் 13ஆம் தேதி மகா கும்பமேளா நடைபெற உள்ளது. இதன் காரணமாக மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் ஒரு தற்காலிக மருத்துவமனை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவ வலியால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் மகா கும்பமேளா நடைபெறும் இடத்தில் முதல்முறையாக பிறந்த குழந்தை என்பதால் அந்த குழந்தைக்கு பெற்றோர் மகாகும்ப் என்று பெயரிட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.