ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரி ஹோட்டா பகுதியில் 20 வயது இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில், இளம் பெண்ணுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் அவரை வாலிபர் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது பிலிகாட் ஏரியின் அருகே உள்ள ஒரு மறைவான இடத்திற்கு வாலிபர் தன் காதலியை அழைத்து சென்றுள்ளார்.

அந்த சமயத்தில் மது போதையில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் வாலிபரை தாக்கி கை கால்களை கட்டி போட்டனர். அதன் பிறகு வாலிபர் கண் முன்னே அவருடைய காதலியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீஹரிகோட்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து 2 வாலிபர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..