
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கொத்தூர் கிராமத்தில் சீனிவாசன்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த சீனிவாசன் தனது மனைவி உமா(40), மகள் இளவரசி(16), சாரா(12) ஆகியோருடன் பட்டாசு புத்தாடை வாங்குவதற்காக திருவாரூர் சென்றுள்ளார். அவர்கள் பண்டிகைக்கு தேவையான அனைத்தையும் வாங்கி விட்டு ஒரே ஸ்கூட்டியில் கூத்தாநல்லூரில் இருந்து மாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் கூட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சீனிவாசனும் இளைய மகள் சாராவும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். படுகாயம் அடைந்த உமா இளவரசி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.