தமிழக பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை ஆசிரியர்கள் எமிஸ் செயலி மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் ஜூன் 10-ம் தேதி ஆகும். இதில் பதிவேற்றம் செய்த பிறகு மறுநாள் கல்வி அலுவலர் அதற்கான ஒப்புதலை வழங்குவார். மேலும் வருவாய் மாவட்டத்துக்குள்ளான கலந்தாய்வு ஜூன் 14ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு ஜூன் 15ஆம் தேதியும் நடைபெறும்.