தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் கூடுதலாக ஆயிரம் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1768 காலி பணியிடங்களுக்கு வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

தற்போது மேலும் ஆயிரம் காலி பணியிடங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளதால் இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு வருகின்ற ஜூலை 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை மொத்தம் 26 ஆயிரத்து 510 பேர் எழுத உள்ளனர். தற்போது கூடுதல் பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.