தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணமாக 10,000 ரூபாய் வழங்கப்படும். இந்நிலையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகையில் முன்பணம் பெற விரும்புபவர்கள் களஞ்சியம் என்ற செயலி மூலம் மட்டுமாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த செயலி கடந்த சில தினங்களாக செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.

இன்னும் தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் கூட முழுமையாக இல்லை. இப்படி இருக்கும்போது செயலியும் சரிவர செயல்படாததால் பண்டிகைக்கு முன்பணம் பெற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக பிரச்சினையை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.