
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம் (வெண்கலம், வெள்ளி) கிடைத்துள்ளது. ஆசிய விளையாட்டில் மும்முனை தாண்டுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. மும்முனை தாண்டுதலில் வெண்கலம் வென்று தமிழ்நாட்டு வீரர் பிரவீன் சித்ரவேல் அசத்தியுள்ளார். மும்முனை தாண்டுதல் போட்டியில் 16.68 மீட்டர் தூரம் தாண்டி வெண்கல பதக்கம் வென்றார் பிரவீன் சித்திரவேல்.
அதேபோல ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. 800 மீட்டர் ஆண்கள் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் முகமது அப்சல் ஒரு நிமிடம் 48.43 வினாடிகளில் இலக்கை எட்டினார்.
News Flash: Praveen Chithravel wins Bronze medal in Triple Jump (16.68m). #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2022 pic.twitter.com/eq4gII8lHF
— India_AllSports (@India_AllSports) October 3, 2023
News Flash: Mohammed Afsal wins SILVER medal in 800m #IndiaAtAsianGames #AGwithIAS #AsianGames2022 pic.twitter.com/9EAG0inFw2
— India_AllSports (@India_AllSports) October 3, 2023