ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடர் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. கடந்த வருடம் ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில் தற்போது ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டிகளில் இருந்து முழுமையாக விலக முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது.

ஆனால் இதனை பிசிசிஐ மறுத்துள்ளது. அதாவது காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்திய நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

இந்நிலையில் ஆசிய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொசின் நக்வி இருப்பதால் பிசிசிஐ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இதனை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா‌ மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் அதைப்பற்றி எந்த ஒரு முடிவும் செய்யவில்லை எனவும் கூறியுள்ளார்.