
சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் முப்பெரும் விழா பற்றி விவாதிக்கப்பட உள்ளது. எனவே மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.