தமிழ் சினிமாவின் உச்சபட்ச நடிகர் தான் நடிகர் விஜய். ஆரம்பத்தில் எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் தன்னுடைய வெற்றியை நோக்கி அவர் பயணித்தார். விமர்சனங்கள் தான் இவரை இந்த உயரத்திற்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். இவர் சினிமாவில் ஜெயித்து தற்போது அரசியலிலும் அடுத்த கட்ட பணியை தொடர்ந்து கொண்டிருக்கிறார். தனியாக கட்சி ஆரம்பித்துள்ளார். இவருடைய ஒவ்வொரு அரசியல் நகர்வும் மற்ற கட்சி பிரபலங்களுக்கும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். பெரிய அளவில் மாநாட்டையும் கூட்டி இரண்டு முறை பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொண்ட விஜய் ஒரு முறை கூட பத்திரிகையாளர்களை சந்தித்து பேசவில்லை.

இது ஒரு பேசு பொருளாகவே மாறி உள்ளது. ஆனால் அதை எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் விஜய் அரசியலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரோடு நடிக்க மறுத்த நடிகை குறித்து தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது விஜய்யின் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் முதலில் அவர் நடிக்க ஒத்துக்கொள்ளவில்லையாம். ஆனால் அவருடைய தந்தை எப்படியாவது தன் மகளை இந்த படத்தின் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். அதன் பிறகு தான் தந்தைக்காக அந்த படத்தில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். அதன்பிறகு விஜய்யின் நடனத்தை பார்த்து ஆச்சரியப்பட்டாராம் பிரியங்கா சோப்ரா.