
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருவதால் நவம்பர் 15 முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள அவசரகால எண்களை அரசை வெளியிட்டுள்ளது.
அதன்படி மழைக்கால பாதிப்பில் சிக்கி இருக்கும் மக்கள் 1070, 1077 என்ற எண்ணுக்கும் 9445869848 என்ற whatsapp எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மழைக்காலத்தில் நோய் பாதிப்பு அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.