பிரான்ஸில் கிறிப்டோகரன்சி தொழில்முனைவோர்களை இலக்காக்கும் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில், பாரிஸில் நடைபெற்ற ஒரு சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பிரபல கிறிப்டோ நிறுவனத்தின் தலைவரின் மகள் மற்றும் பேரனை கொலைமுயற்சியுடன் கூடிய கடத்தல் முயற்சி செய்துள்ளனர். பாரிஸ் நகரின் 11வது மாவட்டத்தில், broad daylight-ல் நான்கு முகமூடி அணிந்த நபர்கள், ஒரு தம்பதியர் மற்றும் அவர்களின் சிறு குழந்தையை தாக்க முயன்றுள்ளனர். மூவரும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தில் இருந்து மூன்று நபர்கள் வெளியேறி, அந்தப் பெண் மற்றும் குழந்தையை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்ற முயன்றனர். தடுக்க முயன்ற கணவரை அவர்கள் தாக்கினர். இந்த பயங்கர சூழலில், அந்தப் பெண் தப்பிக்க முயன்று ஒருவரிடம் இருந்த துப்பாக்கியை பிடித்து தள்ளி வைத்துள்ளார். அவரது அலறல்கள் அருகிலிருந்த பொதுமக்களையும் பாதுகாப்பு நிலையத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அருகிலிருந்த குடியிருப்பாளர் ஒருவர் (fire extinguisher) வீசி தாக்கியதையடுத்து, கொள்ளையர்கள் தங்கள் வாகனத்தில் தப்பியோடியனர். இந்த சம்பவம் முழுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது

 

மேலும் அதிர்ச்சியாக, இதற்கு சில நாட்கள் முன்னர், 60 வயது நபர் ஒருவர் பாரிஸின் 14வது மாவட்டத்தில் broad daylight-ல் கடத்தப்பட்ட சம்பவம் பதிவாகியது. அவரது மகன் கிறிப்டோ மில்லியனரானவர். நான்கு நபர்கள், அந்த நபரைக் கடத்தி விட்டு ஒரு வீட்டில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்தனர். அவரை மீட்டபோது அவர் விரல்களில் ஒருவிரல் இல்லாதது தெரிய வந்தது. போலீசார் நடத்திய திடீர் சோதனையில், 20 வயதிற்குட்பட்ட 5. பேர் கைது செய்யப்பட்டனர். இந்த தொடர் சம்பவங்கள், பிரான்ஸில் கிறிப்டோ தொழிலில் ஈடுபட்டவர்களும், அவர்களின் குடும்பங்களும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்களை மிக தெளிவாக வெளிக்கொண்டு வருகிறது.