
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கராச்சியில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் கணவர் வேறு ஒரு சில பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பெண் தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அந்த நபர் தனது மனைவியின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.
இதனால் அந்த பெண் வலியில் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அடைந்த அக்கம்பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணுக்கு 40 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.