
பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் பேட்ட ராப். இந்த படம் செப்டம்பர் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்திருந்தார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் பிரபுதேவா பேசியது பத்திரிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
பிரபுதேவா பேசுகையில் “முன்பெல்லாம் பத்திரிக்கையாளர்களை பார்த்தால் ஒரு வித பயம் இருக்கும். நம்ம அவ்வளவு கலாட்டா பண்ணி இருப்போம், அவங்களோட கேள்வி எல்லாம் அப்படி இருக்கும். ஆனா இவ்வளவு வருஷம் அவங்க கூட பயணம் பண்ணிட்டு இப்ப திரும்ப அவங்கள பார்க்கும்போது சந்தோசமா இருக்கு.
எதற்காக இவர்களைப் பார்த்து பயந்தோம், நமது நண்பர்கள் மாதிரி தானே. அம்மா அப்பா மாதிரி தப்பு பண்ணா சுட்டி காட்டுற மாதிரி தானே இருந்தாங்கன்னு தோணுது. உங்கள எல்லாம் பார்த்தாலே நம்ம ஆளுங்க அப்படி ஒரு சந்தோசம் வருது” எனக் கூறியுள்ளார்