
பாம்புகளைப் பார்த்தாலே பலர் பயந்துவிடுவர். ஆனால் இந்த வீடியோ உங்கள் மனதை அலறவைக்கும் விதமாக இல்லாமல், அதிர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் இருக்கிறது. இந்தோனேசியாவில் பதிவான ஒரு ராஜ நாகப்பாம்பு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பாம்பு ஒன்று தனது தலையில் பின்னப்பட்ட தொப்பியுடன் அழகாக போஸ் கொடுப்பது, நெட்டிசன்களை பெரிதும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த வீடியோவை பிரபல இன்ஸ்டாகிராம் பயனரான ‘SAHABATH ALAM’ பகிர்ந்துள்ளது. பாம்பின் தலையில், கரடி காதுகள் போன்ற அலங்காரங்கள் கொண்ட ஒரு தொப்பி இறுக்கமாக இருக்கிறது. அருகில் உள்ள ஒருவர் பாம்பின் வாலை நகைச்சுவையாகத் தொட்டு, பின்னர் அதன் தொப்பியில் இருந்த காதுகளை அசைத்துள்ளார். இதற்கு பாம்பு வேகமான எதிர்வினை காட்டினாலும், இது மக்கள் மனதில் “பயம்” அல்ல, “அழகு” என்ற வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாம்பின் பாவனையான தோற்றம், பொதுவாகவே கொடிய உயிரினம் எனப்படும் நாகத்தின் பிம்பத்தை முற்றிலும் மாற்றியுள்ளது.
இந்த வீடியோ தற்போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் ஆயிரக்கணக்கான கருத்துக்களுடன் இணையத்தில் பிரபலம் ஆகியுள்ளது. மக்கள், “பாம்பு இல்ல புயல் அழகு”, “பூக்கி நாகம்!”, “இது நாகமா? இல்ல நகைச்சுவை நடிகனா?” என நகைச்சுவையான கருத்துக்களையும், அன்பான பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற விலங்குகளின் வித்தியாசமான உருவப்படங்கள் சமூக வலைதளங்களில் உயிரினங்களைப் பற்றிய பார்வையை மாற்றும் வகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.