தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மாதம் மழைப்பொழிவு சற்று அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.