தோள் பட்டையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எனக்கு அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் உடல் நலம் பெற்று திரும்புவேன் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், தனக்காக கவலை கொள்ளும் உள்ளங்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.