அமெரிக்காவின் கிழக்கு அர்ஜென்டினா பகுதியில் கடந்த சில நாட்களாக புயல் விசி வருகிறது. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் இந்த புயலால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். பல இடங்களில் கட்டிடங்களும் சேதம் ஆகியுள்ளது. இந்நிலையில் ஏரோபார்க் நியூபெரி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் இந்த புயலால் தடுமாறியுள்ளது.

புயலின் வேகத்தால் விமானம் நகரத் தொடங்கியுள்ளது. அப்போது விமானத்தில் ஏற பயன்படுத்தப்படும் படிக்கட்டு மற்றும் சரக்கு கொண்டு செல்லும் வாகனம் உள்ளிட்டவற்றில் விமானம் மோதி சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.