தமிழ் சினிமாவில் 2001ம் வருடம்  “நீலா” என்ற கன்னடப் படத்தில் முதலில் அறிமுகமான நடிகை காயத்ரி ஜெயராமன் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வந்தார். 2005ம் ஆண்டு வரை மட்டுமே படங்களில் நடித்த காயத்ரி ஜெயராமன், அந்தமானில் ஒரு ரிசார்ட்டில் பணியாற்றிய போது, ரிசார்ட் உரிமையாளர் சமீத்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் வசீகரா படத்தில் விஜயுடன் நடித்தது குறித்து மனம் திறந்த காயத்ரி ஜெயராமன், சினிமாவில் எப்போதும் நடிகைகளுக்கு தொந்தரவு இருக்கும். ஆனால் விஜயுடன் நடிக்கும்போது பாதுகாப்பாக இருக்கும். அரைகுறை ஆடையில் நடித்தாலும் அவரது பார்வை எப்போதும் தவறாக இருக்காது” என தெரிவித்துள்ளார்.