மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்தானா மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த மாதம் சோனோகிராபி எடுக்கப்பட்டது. அப்போது அவருடைய வயிற்றில் வளரும் கருவுக்குள்ளும் ஒரு கரு இருப்பது தெரிய வந்தது. இந்தப் பெண்ணுக்கு கடந்த 1ஆம் தேதி டெலிவரி ஆன நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அந்த குழந்தை அரசு ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

குழந்தையின் வயிற்றில் இருந்த இரு கருக்களை வெற்றிகரமாக ஆப்ரேஷன் மூலம் அகற்றினர். இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 200 பேருக்கு மட்டுமே இந்த பாதிப்பு இருந்துள்ளதாம். மேலும் இந்தியாவில் 10 முதல் 15 பேருக்கு இந்த பாதிப்பு இருந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.