சிவகங்கை மாவட்டம் திருபுவனம் பகுதியில் அஜித்குமார் என்ற இளைஞரை போலீசார் அடித்துக் கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி  தற்போது தலைமறைவாக விட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஏற்கனவே நிகிதா மீது கடந்த 2011ஆம் ஆண்டு பண மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இரண்டு பேரிடம் 16 லட்சம் மோசடி செய்ததாக இவர் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காரில் இருந்த 9 சவரன் தங்க நகைகளை காணும் என பண மோசடி வழக்கில் சிக்கிய ஒரு பெண் புகார் கொடுத்த நிலையில் போலீசார் அஜித்குமாரை கைது செய்த சம்பவம் தற்போது மீண்டும் சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.