தமிழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்களை நிரப்ப நடைபெற்ற எழுத்து தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது.

இந்த தேர்வுக்கான விடைக்குறிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேவைப்படும் நபர்கள் விடை குறிப்பை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எழுத்து தேர்வுக்கான மதிப்பெண்களும் இந்த இணையதளத்தில் நவம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.