கடலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார் பேட்டையில் இருந்து அரசு பேருந்து சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் புதுப்பேட்டை அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக தையல்நாயகி என்பவர் அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது. இதனால் அந்த மூதாட்டி பேருந்தின் பின்பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார்.

இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியில் அலறி துடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.