பீகார் மாநிலத்தில் சமீபத்தில் BPSC ஒருங்கிணைந்த முதன்மை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 945 மையங்களில் நடைபெற்ற நிலையில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் வரை தேர்வை எழுதினர். இந்த தேர்வு சமயத்தில் வினாத்தாள் லீக்கானதாகவும் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் கூறி மாணவர்கள் திடீரென போராட்டம் நடத்திய நிலையில் ஒரு மாணவரை அவர்கள் சரமாரியாக தாக்கிய வீடியோக்களும் வெளியாகியது.

இது தொடர்பாக எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் எந்த முறை கேடுகளும் நடக்கவில்லை எனவும் போராட்டம் என்பது வெறும் சதி வேலை எனவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பாட்னாவில் தேர்வு நடைபெற்ற போது வினாத்தாள் தருவதற்கு 40 முதல் 45 நிமிடங்கள் வரை தாமதமானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆசிரியர்கள் வைத்திருந்த வினாத்தாள்களை கெடுத்து மாணவர்கள் கிழித்த நிலையில் சிலர் அதனை தூக்கி கொண்டு வெளியே ஓடினார். அதோடு வருகை பதிவேடு போன்றவற்றையும் கிழித்துள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.