தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்ததை தொடர்ந்து மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூலை 4-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த கல்லூரிகளில் சேர்வதற்கான பொது கலந்தாய்வு கடந்த ஜூன் 1ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி உடன் முடிவடைந்தது. தொடர்ந்து நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதன்படி ஜூலை நான்காம் தேதி பிற்படுத்தப்பட்டோர், ஜூலை ஐந்தாம் தேதி மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஜூலை 7ஆம் தேதி தகுதியுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.