
கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்கள் பலரும் பணத்தை கொடுத்து பணியிட மாறுதல் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் மாநில அரசு தற்போது புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் குரூப் A, B, C, D என அனைத்து பிரிவுகளிலும் நடப்பு நிதியாண்டில் ஆறு சதவீதம் ஊழியர்களை மட்டுமே பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கு மேல் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு முதல்வரின் ஒப்புதல் தேவை எனவும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய உத்தரவு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் துறைகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழியரின் பணி காலத்தை நீட்டிப்பு செய்வதற்கும் முதல்வரின் அனுமதி அவசியம். இந்த உத்தரவை அலுவலர்கள் மற்றும் செயலாளர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் மீறினால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.