
புதுச்சேரியில் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து எஸ் பி மாறன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக புதுச்சேரியில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும். அதனைப் போலவே அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிவதும் கட்டாயமாகும். அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணிகிறார்களா என இன்று முதல் சோதனை செய்யப்பட உள்ளது. புதுச்சேரியில் கடந்த ஆண்டு 13,292 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதால் பல உயிரிழந்து உள்ளதால் இன்று முதல் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.