நாடு முழுவதும் எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19 முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான தொகுதி முடிவுகள் ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு மாநில அரசும் தங்களுடைய ஊழியர்களுக்கான சம்பள உயர்வை அறிவித்து வருகின்றன. அதன்படி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் அகவிலைப்படி உயர்வை அறிவித்துள்ளன.

அதனைப் போலவே ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஹரியானா மாநிலங்களும் சம்பளத்தை உயர்த்தியுள்ளன. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் பல மடங்காக உயர்ந்துள்ளது. இறுதியாக அரியானா மாநில அரசும் அரசு ஊழியர்களின் அகவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்தியுள்ளது. மொத்தம் 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயர்த்தப்பட்ட அகவிலைப்படி விகிதங்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.