தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்திற்கான ஊதியம் வருகிற ஏப்ரல் மாதம் 2-ம் தேதி விடுவிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி வருடாந்திர கணக்கு முடிவடைகிறது.

இதனால் வங்கிகளுக்கு விடுமுறை. எனவே 9.30 லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் 7.05 லட்சம் ஓய்வூதியர்களுக்கான தொகை ஏப்ரல் இரண்டாம் தேதி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.