திருப்பூர் மாவட்டம் ஜோத்தம்பட்டி என்னும் பகுதியில் வர்ஃபில் நெட் என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் நெசவுத்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இணையதளங்களில் மிகவும் அவதூறாகவும் ஆபாசமாகவும் பல பதிவுகளை இவர் வெளியிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த பதிவில் வெடிகுண்டு வைத்து பிரிவினைவாத, தீவிரவாத பிணங்களை கூவத்தில் எரியுங்கள் என இந்திய அரசு, ராணுவம் , அனைத்து மாநில அரசு, மற்றும் மாநில காவல்துறைக்கு உத்தரவு கொடுக்கிறேன் என்றும் முக்கியமாக தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவு கொடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரை மடத்துக்குளம் ஜே.எம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.