
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது விஜயின் அரசியல் பயணம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு விஷால் கூறியதாவது, இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கிறது. நான் விஜயின் தீவிர ரசிகன். விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு முழுமையாக ஆதரவு கொடுக்கிறேன். அதே சமயத்தில் விஜயின் தேர்தல் அறிக்கையை பொருத்துதான் நான் அவருக்கு ஆதரவு கொடுப்பதும் கொடுக்காததும் தெரியும்.
விஜய் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும். விஜயின் தேர்தல் அறிக்கையை பொருத்துதான் நான் அவருக்கு ஆதரவு கொடுப்பேனா இல்லையா என்பதை அறிவிப்பேன் என்று கூறினார். முன்னதாக நடிகர் விஷால் அடுத்து வரும் 2026 தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் மிஸ்கின் சர்ச்சையாக பேசி பின்னர் மன்னிப்பு கேட்டது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அதற்கு மிஸ்கினுக்கு இதே வேலையா போச்சு என்று கூறினார்