
தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் விஜய் ஆரம்பித்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அவருடைய கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியது. அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னம் தங்களுக்கு சொந்தமானது எனவும் அதனை உடனடியாக அவர்கள் நீக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் கட்சி கொடியில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்று விளக்கம் கொடுத்தது. இந்நிலையில் நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வி.சாலை என்ற பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இன்று பந்தல்கால் நடும் விழா நடைபெற்றது.

இந்த விழா நடந்து முடிந்த நிலையில் தற்போது கட்சியின் தலைவர் விஜய் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தன்னை விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் பதிலடி கொடுத்துள்ளார். அதன்பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ள தொண்டர்களுக்கு அவர் அழைப்பும் எடுத்துள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இவர்களுக்கு அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா.? மாநாடு என்றால் என்னவென்று தெரியுமா.? இவர்களால் வென்று காட்ட முடியுமா என்று ஏகப்பட்ட கேள்விகளை நம் மீது வீசுவதில் சிலர் அதீத விருப்பம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும் போது தான் அவர்களுக்கு புரியும். தமிழக வெற்றி கழகம் ஏதோ பெயருக்கு அரசியலுக்கு வந்த கட்சி கிடையாது எனவும் வீறுகொண்டு அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதையும் இனிமேல் நம்மை எடைபோடுபவர்கள் புரிந்து கொள்வார்கள். மக்கள் இயக்கமாக இருந்த நாம் மக்களோடு மக்களாக உரையாடி அரசியல் உரிமைகளை வென்றெடுக்க போகும் இயக்கமாக மாறிவிட்டோம். அரசியல் களத்தில் வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அதை விட விவேகமாக இருப்பது முக்கியம்.
அதோடு எதார்த்தமாக செயல்படுவதை விட எச்சரிக்கையாக களமாடுவது ரொம்ப அவசியம். மாநாட்டு குழுக்களுக்கான தொகுதி பொறுப்பாளர்களும் அது சார்ந்த சட்டமன்ற பொறுப்பாளர்களும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர். மாநாட்டுகான பணிகளை இப்போதே மனம் என்ன தொடங்கிவிட்டது உங்களை அருகில் காணும் சந்தோஷத்திற்காக காத்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.