
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருடைய 69 ஆவது படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார். இந்த படத்திற்கு ஜனநாயகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், பிரியாமணி, கௌதம் மேனன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். கேவி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். அரசியல் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
கிட்டதட்ட 400 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் திரையரங்க உரிமையை செவன் ஸ்கீரின்ஸ் நிறுவனம் 100 கோடிக்கு கைப்பற்றி உள்ளது . படத்தின் உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டிபோட்டு வரும் நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வைரலானதால் சிலர் பிசினஸ் வேறு அரசியல் வேறு என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இருப்பினும் விஜய் அரசியலில் கடுமையாக விமர்சித்தது திமுகவை தான். எனவே இரண்டு தரப்பிற்கு மத்தியில் பெரிய உரசல் இருப்பதாக கூறப்படும் இந்த சூழலில் சூழலில் கலாநிதி மாறன் எப்படி ஜனநாயகன் படத்தை கைப்பற்றுவார்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் சன் டிவி ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமைமை வாங்குவதற்கான சாத்திய கூறுகள் குறைவுதான்.